என் மகளுக்கோ! மகனுக்கோ! திருமணம் என்று யாரேனும் சொல்ல கேட்டாள்! உடனே ஜாதகம் பொருந்தி இருக்கிறதா? பத்து பொருத்தமும் பொருந்தி இருக்கிறதா? என்ற கேள்வி தான் அநேகம் பேர் எழுப்புவார்கள். அப்படி என்ன விசேஷம் இந்த திருமணப் பொருத்தத்திற்கு என்று நாம் இந்த பதிவில் காண இருக்கிறோம்…

திருமண பொருத்தம் இராசி நட்சத்திரம் பொருத்தம்

ஆயிரம் காலத்துப் பயிர் என்று இன்று வரை எல்லோராலும் பேசப்படும் திருமணம் எனும் பந்தத்திற்கு ஜாதகப் பொருத்தம் அல்லது திருமணப் பொருத்தம் என்பது கிட்டத்தட்ட உயிர் நாடி போல தான் ஜாதகம் பார்க்காமலும் திருமணம் செய்து கொள்கிறார்களே! இந்த காலத்தில் என்று நீங்கள் நினைக்கலாம் இருந்தாலும் பத்தில் எட்டு பேர் இன்றளவும் ஜாதகம் திருமண பொருத்தங்களும் பார்த்தே திருமணம் செய்து கொள்கிறார்கள்.

இந்த காலத்து இளைஞர்கள் எல்லாம் ஜாதகத்தை நம்ப வேண்டாம் அந்த காலத்து பழைய மூடநம்பிக்கைகளை நம்ப வேண்டாம் என்று எல்லாம் கூறுகிறார்கள் ஆனால் அவர்கள் கூட சில அனுபவங்களுக்குப் பிறகு ஒரு குறிப்பிட்ட வயதை அடையும் பொழுது ஜாதகம் என்பது உண்மைதானோ என்று நம்பக்கூடும்..

  1. தினப்பொருத்தம்
  2. கணப் பொருத்தம்
  3. ராசி பொருத்தம்
  4. யோனிப்பொருத்தம்
  5. ரஜ்ஜு பொருத்தம்

மணமகன்
பெயர்
இராசி
நட்சத்திரம்
மணமகள்
பெயர்
இராசி
நட்சத்திரம்

  1. தினப் பொருத்தம்
  2. கணப் பொருத்தம்
  3. மகேந்திர பொருத்தம்
  4. ஸ்திரீ தீர்க்க பொருத்தம்
  5. யோனி பொருத்தம்
  6. இராசி பொருத்தம்
  7. இராசி அதிபதி பொருத்தம்
  8. வசிய பொருத்தம்
  9. ரஜ்ஜி பொருத்தம்
  10. வேதை பொருத்தம்
  11. நாடிப் பொருத்தம்
  12. விருட்சம் பொருத்தம்

தினப் பொருத்தம்

தினப் பொருத்தம் என்பது மணமக்களின் அன்றாட வாழ்க்கையின் நிம்மதியை குறிப்பதாகும். நாளும் பொழுதும் இணைந்து இவர்கள் இல்லற வாழ்வை இனிமையாக நடத்துவார்களா? என்பதை கணிக்கும் பொருத்தமே இந்த தினப் பொருத்தமாகும். தினப் பொருத்தமானது இல்லாமல் யாரும் திருமணத்தை நடத்த மாட்டார்கள் ஏனென்றால் ஆணும் பெண்ணும் இணைந்து அவர்களுடைய இல்லற வாழ்க்கையில் ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியாக கழிப்பதற்காகவே இந்த திருமணம் என்னும் பந்தமானது நடத்தி வைக்கப்படுகிறது. எனவே தினம் தினம் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கப் போவதில்லை என்பதை தெரிந்து கொண்டு யாரும் அவர்களுக்கு திருமணம் செய்ய நினைக்க மாட்டார்கள்.

பெண்ணின் விண்மீனில் இருந்து ஆணின் விண்மீன் வரை எண்ணி 9 ஆல் வகுத்தால் மீதம் எதுவும் கிடைக்கவில்லை என்றால் நல்லது. அப்படி மீதம் கிடைத்தாலும் அது 11,13,4,2,6,15,9,8,20,18,24 என்ற எண்களாக இருந்தால் தினப் பொருத்தம் பொருந்தியிருக்கிறது என்று அர்த்தம்.

மனிதர்களின் நட்சத்திரங்களை பொறுத்து ஜாதகத்தில் கணங்கள் குறிப்பிடப்படுகிறது. மொத்தமே மூன்று கணங்கள் மட்டுமே உள்ளன. ஒன்று தேவ கணம், மனித கணம், இறுதியாக ராட்சச கணம். இதில் பொருத்தம் என்பது, இணையான கணங்களுடன் மணமக்கள் இருப்பது. அதாவது தேவ கணமுடைய மணமகன் தேவ கணம் உடைய மனமகளுடன் இணைய வேண்டும். அதேபோல் மனித கணமும் ராட்சகணமும் அதே கணங்களுடன் தான் இணைய வேண்டும். அவ்வாறு இருந்தால் பொருத்தமானது உள்ளது என்று அர்த்தம்.

கண பொருத்தம் என்பது மணமக்களுடைய குண நலன்களை தெரிவிக்கும் பொருத்தம் ஆகும். தேவ கணம் உடைய ஆணும் பெண்ணும் உயர்ந்த சிந்தனைகளுடனும் எண்ணங்களுடன் இருப்பார்கள். அதேபோல் மனித கணம் உடைய ஆணும் பெண்ணும் எல்லா சூழ்நிலைகளுக்கும் வளைந்து கொடுத்து செல்வார்கள். ராட்சச கணம் உடைய ஆணும் பெண்ணும் யாருக்கும் அடங்கி இருக்க மாட்டார்கள்.

மகேந்திர பொருத்தம் 12 பொருத்தங்களில் குழந்தை பேரை குறிக்கும் பொருத்தமாக மகேந்திர பொருத்தம் விளங்குகிறது. எனினும் மகேந்திர பொருத்தம் இல்லாமலும் திருமணம் ஆனது செய்து கொள்ளலாம். ஏனெனில் திருமணத்திற்கு தேவையான மிக முக்கிய ஐந்து பொருத்தங்கள் பொருந்தி இருந்தாலே நிச்சயம் அந்த தம்பதிகளுக்கு குழந்தை பேரானது கிடைக்கும். எனவே மகேந்திர பொருத்தத்தை மிக முக்கிய பொருத்தங்கள் ஆக எண்ண வேண்டாம்.

RASI PORUTHAM ராசி பொருத்தம்

நடக்கவிருக்கும் திருமணத்தின் மூலம் ஸ்திரீயானவள் என்ன வகையான பலன்களை பெறப்போகிறார் என்பதை குறிக்கும்.

அவளுடைய வாழ்க்கையில் என்ன நலன்களை எல்லாம் அவள் பெறப் போகிறாள் அதோடு நிலையான வாழ்க்கையாக அந்த பெண்ணிற்கு இந்த திருமணம் அமையுமா? என்பதையெல்லாம் கணிக்கும் பொருத்தமே இந்த ஸ்திரீ தீர்க்கப் பொருத்தமாகும். பெண்ணிற்கு எல்லா வளமும் நலமும் கிடைக்கப் பெறுகிறதா என்பதை இந்த பொருத்தத்தின் மூலம் கணிக்கலாம். அதோடு அந்த பெண்ணிற்கு ஏதேனும் உடல் நலக்குறைவோ இல்லை உயிருக்கு ஏதேனும் தீங்கு விளைவிக்கும் நிகழ்வுகளோ நடக்கவிருக்கிறதா என்பதை இந்த பொருத்தத்தின் மூலம் கணிக்க முடியும். எனவே இதுவும் ஒரு முக்கிய பொருத்தமாக பார்க்கப்படுகிறது.

இந்த பொருத்தம் இல்லையென்றால் திருமணமே நடக்காது எனும் முக்கிய பொருத்தங்களில் யோனி பொருத்தமும் ஒன்றாக கருதப்படுகிறது. அப்படி என்ன யோனி பொருத்தத்தின் சிறப்பு என்றால், திருமணம் செய்யவிருக்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும் தாம்பத்திய சுகமானது எவ்வாறு இருக்கப் போகிறது. அவர்களுடைய தனிப்பட்ட தாம்பத்திய உறவானது நிறைவாக இருக்குமா? என்பதை கணிக்கும் பொருத்தமாகவும் இந்த யோனி பொருத்தமானது இருக்கிறது. மகேந்திர பொருத்தம் இல்லை என்று வருந்துபவர்களுக்கு யோனி பொருத்தமானது இருந்து விட்டால் நிச்சயமாக குழந்தை பேரு இவர்களுக்கு கிடைக்கும் என்பது முன்னோர்களின் வாக்காகும்.

ஒரு குடும்பத்தின் வாரிசு என்பது ஒரு ஆண் குழந்தையாகவே கருதப்படுகிறது. எனவே திருமணம் செய்யவிருக்கும் தம்பதிகளுக்கு ஆண் குழந்தை பிறக்குமா என்பதை இந்த ராசி பொருத்தத்தின் மூலம் தெரிந்து கொள்ள முடியும். என்னதான் காலமும் தொழில்நுட்பமும் வளர்ந்தாலும் கூட இன்னமும் மக்களின் மத்தியில் ஒரு குடும்பத்தின் வாரிசு என்பது ஆண் குழந்தையாகவே கருதப்படுகிறது. இந்த மனோநிலை மாற வேண்டும் என்பது அனைவரின் கருத்தாக இருந்தாலும் தற்போது வரை அனைவரும் ஆண் குழந்தை இருக்கிறதா என்ற கேள்வியை எழுப்பிக்கொண்டு தான் இருக்கிறார்கள் எனவே தான் முன்கூட்டியே அதாவது திருமணத்திற்கு முன்பே இவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்குமா பிறக்காதா என்பதை இந்த பொருத்தத்தின் மூலம் நாம் தெரிந்து கொள்ள முடியும்.

ராசி அதிபதி பொருத்தம் என்பது திருமணம் செய்யவிருக்கும் தம்பதிகளுக்கு இடையேயான உறவானது எந்த நிலையில் பயணிக்க போகிறது அவர்களுக்கு இடையேயான உறவானது எவ்வளவு அழுத்தமாகவும் உறுதியாகவும் இருக்கப்போகிறது என்பதெல்லாம் கணிக்கும் பொருத்தமாகும். அதாவது அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை நட்புடன் பயணிக்க போகிறார்களா அல்லது சமமான மனநிலையுடன் பயணிக்க இருக்கிறார்களா அல்லது பகைமை உணர்வுடன் எதிரும் புதிருமாக பயணிக்க போகிறார்களா என்பதையெல்லாம் இந்த ராசி அதிபதி பொருத்தத்தை வைத்து கணித்து விடலாம். இதில் நட்பு, பகை, சமம் என்ற மூன்று நிலைகள் உள்ளது. பகை என்ற நிலை மட்டும் வருதல் கூடாது. மீதி இரண்டுமான நட்பும், சமமும் பொருத்தத்தில் இடம்பெறலாம்.

THIRUMANA PORUTHAM JATHAGAM PORUTHAM

திருமணம் என்பது நீண்ட கால உறவாகும். எனவே இதனை பாதியிலே தட்டிக் கழிக்க நிச்சயம் முடியாது. வசிய பொருத்தத்தின் மூலமாக மணமக்கள் ஒருவரை ஒருவர் தங்களுடைய குணத்தாலும் மனதாலும் அழகாலும் வசியப்படுத்தி மகிழ்ச்சியாக வாழ்நாள் முழுவதும் நிம்மதியாக வாழ்வார்களா? என்பதை கணிக்கும் வழிமுறையாகும். இதில் ஒவ்வொரு ராசிக்கும் வசிய படும் மற்றொரு ராசி உண்டு. எனவே அதை எவ்வாறு கணிக்க வேண்டும் என்பதை கீழே அட்டவணையாக கொடுக்கப்பட்டுள்ளது. வலது புறத்தில் இருப்பது ஒரு பெண்ணின் ராசியாக எடுத்துக் கொள்ளுங்கள்‌. இடதுபுறத்தில் இருப்பதோ ஆணின் ராசியாக எடுத்துக் கொள்ள வேண்டும். வலது புறத்தில் இருக்கும் பெண்ணின் ராசியானது இடது புறத்தில் இருக்கும் ஆணின் ராசியை வசியப்படுத்தும் என்பதே இந்த வசிய பொருத்தம் ஆகும்.

மேஷம்சிம்மம், விருச்சகம்
ரிஷபம்கடகம், துலாம்
மிதுனம்கன்னி
கடகம்விருச்சிகம், தனுசு
சிம்மம்துலாம், மீனம்
கன்னிரிஷபம், மீனம்
துலாம்மகரம்
விருச்சகம்கடகம், கன்னி
தனுசுமீனம்
மகரம்மேஷம், கும்பம்
கும்பம்மீனம்
மீனம்மகரம்

திருமணம் நடக்க வேண்டுமா? நிச்சயம் இந்த பொருத்தம் இருக்க வேண்டும். அதாவது ரஜ்ஜு பொருத்தம் இருந்தால் மட்டும்தான் ஒரு திருமணமானது நடக்கும். ஏனெனில் மிக முக்கியமான ஐந்து பொருத்தங்களில் ரஜ்ஜு பொருத்தம் மிக மிக முக்கியமான பொருத்தம் ஆகும். ரஜ்ஜு என்றால் கயிறு என்று பொருளாகிறது. எனவே இது மணமகள் கழுத்தில் ஏறவிருக்கும் தாலி கயிற்றை குறிப்பதாகும். இந்த பொருத்தத்தை கணிப்பதன் மூலமாக அந்த தாலிக்கயிறின் பலத்தை கணிக்கும் வழிமுறையாக இது பார்க்கப்படுகிறது.

சிரசு ரஜ்ஜு, கண்ட ரஜ்ஜு, உதர ரஜ்ஜு, பாத ரஜ்ஜீ, ஊரு ரஜ்ஜு என ஐந்து வகையான ரஜ்ஜுகள் உள்ளன.

நட்சத்திரங்கள் ஒன்றுக்கொன்று வேதையாக அதாவது தாக்கிக் கொள்ளுதல் அல்லது பகையாக இருக்கிறதா? என்பதை கணிக்கும் பொருத்தமே இந்த வேதைப் பொருத்தமாகும். இதன் மூலமாக மணமக்களின் நட்சத்திரங்கள் மற்றும் அவற்றின் உறவு நிலைகளை பற்றி நாம் கணிக்க முடியும். கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் நட்சத்திரங்களும் அதற்கு வேதையான நட்சத்திரங்களும் கொடுக்கப்பட்டுள்ளது.

உத்திரத்திற்குபூரட்டாதி வேதை ஆகும்.
கார்த்திகைக்குவிசாகம் வேதை ஆகும்.
அசுவினிக்குகேட்டை வேதை ஆகும்.
புனர் பூசத்திற்குஉத்ராடம் வேதை ஆகும்.
பூசத்திற்குபூராடம் வேதை ஆகும்.
ஆயில்யத்திற்குமூலம் வேதை ஆகும்.
பூரத்திற்குஉத்ரட்டாதி வேதை ஆகும்.
ரோகிணிக்குசுவாதி வேதை ஆகும்.
மகத்திற்குரேவதி வேதை ஆகும்.
திருவாதிரைக்குதிருவோணம் வேதை ஆகும்.
அஸ்தத்திற்குசதயம் வேதை ஆகும்.
பரணிக்குஅனுஷம் வேதை ஆகும்.

மேலே கொடுக்கப்பட்டுள்ளவை ஒன்றுகொன்று வேதை ஆகும். இந்த நட்சத்திர இணைவானது அதமம் ஆகும்.

இதை தவிர மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் போன்ற நட்சத்திரங்கள் ஒன்றுக்கொன்று வேதை நட்சத்திரங்களாக உள்ளதால் இவைகளும் பொருந்தாது. இந்த நட்சத்திரக்காரர்களை இணைக்காமல் இருப்பது நல்லது.

நாடிப் பொருத்தம் என்பது தற்போதைய நவீன காலகட்டத்தில் தேவையில்லாத பொருத்தத்தில் ஒன்றாகவே கருதப்படுகிறது. இது பிணிகள் எதுவும் இன்றி அதாவது நோய்நொடி எதுவும் இன்றி வாழ்வார்களா என்பதை கணிக்கும் பொருத்தமாகும்.

நீர்ம நாடி, பித்தநாடி, வாயு நாடி என மூன்று வகையான நாடிகள் உள்ளன. மணமக்கள் இருவரும் வெவ்வேறு நாடிகளை உடையவர்களாக இருக்க வேண்டும்.

மகேந்திர பொருத்தத்தைப் போலவே இதுவும் குழந்தை பேரை கணிக்கும் பொருத்தமாகவே கருதப்படுகிறது. விருட்சம் என்றால் மரம் என்று பொருள். திருமணம் செய்ய போகும் மணமக்களின் குடும்பமானது விருட்சம் போல வளருமா? என்பதை கணிப்பதற்காகவே இதற்கு விருட்ச பொருத்தம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதனை மரப்பொருத்தம் என்றும் கூறுகிறார்கள். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஏற்ப ஒரு மரமானது கொடுக்கப்பட்டுள்ளது. ஆண் பெண் இருவரின் நட்சத்திரத்தையும் கணித்து கிடைக்கும் மரமானது பால் மரமாக இருப்பின் அவர்களுக்கு குழந்தை பேரு நிச்சயம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும்.